கால்பந்து அரசன் 'பீலே'


சாவோ பாவ்லோ: கால்பந்து விளையாட்டின் அரசன் பீலேவின் பெயரை போர்ச்சுகீஸ் (Portuguese) மொழி அகராதியில் பொருள்பட பெயரடையாக சேர்த்துள்ளது Michaelis Portuguese அகராதி. இது பிரேசில் நாட்டில் இருந்து வெளிவரும் அகராதியாகும். இதன் மூலம் உலகில் போர்ச்சுகீஸ் மொழியை பேசி வரும் 265 மில்லியன் மக்களுக்கு ‘பீலே’ அர்த்தமுள்ள சொல்லாக மாறியுள்ளது.

சுமார் 1,67,000 சொற்கள் அடங்கிய அந்த அகராதியில் பீலேவின் பெயரும் ஒன்றாக தற்போது இணைந்துள்ளது. பீலே என்றால் ‘அபூர்வமான, ஒப்பற்ற, தனித்துவமான’ என்ற பொருளை குறிப்பிடும் வகையில் அந்த அகராதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே பீலே என்றால் ‘தன் பணியில் சிறந்து விளங்கும் ஒருவரை’ குறிப்பிட்டு சொல்லி வருவதாகவும் பீலே அறக்கட்டளை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பரில் தனது 82-வது வயதில் பீலே காலமானார். இப்போதைக்கு ‘பீலே’ எனும் சொல் Michaelis Portuguese அகராதியின் ஆன்லைன் பதிப்பில் இடம்பெற்றுள்ளதாகவும். வரும் நாட்களில் அச்சு பிரதியில் இடம்பெறும் எனவும் தெரிகிறது.

பீலே பிரேசில் அணிக்காக 1957 முதல் 1971 வரை விளையாடி 92 போட்டிகளில் 77 கோல்களை பதிவு செய்துள்ளார். அனைத்து விதமான கால்பந்து போட்டிகளிலும் சேர்த்து சுமார் 1,281 கோல்களை பதிவு செய்துள்ளார். ‘ஃபிஃபாவின் நூற்றாண்டுக்கான சிறந்த வீரர்’ என்ற விருதை மற்றொரு கால்பந்து ஜாம்பவானும், தனது நண்பருமான மரடோனாவுடன் பீலே பகிர்ந்து கொண்டார்.











 குழந்தைகளுக்கு ஏற்படும் வாயுத்தொல்லையும் வயிற்று வலியும்:

குழந்தைகளின் செரிமான உறுப்புகள் முழுமையான வளர்ச்சியை அடைந்து இருக்காது. அதனால் அவர்கள் தாய்ப்பால் அல்லது பால் குடிக்கும் போது, சில குழந்தைகளுக்கு வாயுத்தொல்லை, வயிறு எரிச்சல், செரிமானம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதனால் குழந்தைகள் உப்புசம், அசவுகரியம், வயிறு வலி போன்றவைகளால் பாதிக்கப்படுகின்றனர்.

எல்லா காலத்திற்குமான தீர்வு – உட்வேர்ட்ஸ் கிரைப் வாட்டர்: குழந்தைகளுக்கு ஏற்படும் வயிறு தொடர்பான பிரச்சினைகளுக்கு உட்வேர்ட்ஸ் கிரைப் வாட்டர் உடனடித் தீர்வினைத் தருகிறது. கடந்த 170 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து உபயோகப்படுத்தப்பட்டு வரும் உட்வேர்ட்ஸ் கிரைப் வாட்டர், தலைமுறை தலைமுறையாக கோடிக்கணக்கான தாய்மார்களின் நம்பிக்கையை பெற்றிருக்கிறது.

அழும் குழந்தையின் அழுகையை நிறுத்தி அவர்களை சகஜமான நிலைக்கு மாற்றுவதற்கு கிரைப் வாட்டர் கொடுப்பது மிகச் சிறந்த வழிமுறையாகும். 170 ஆண்டுகளாக உலகம் முழுவதும் உள்ள தாய்மார்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சதகுப்பை எண்ணெய் மற்றும் சர்ஜி காக்ஷரா (Sarjikakshara)ஆகியவற்றை கவனமுடன் சேர்த்து ஆயுர்வேத முறையில் உருவாக்கப்பட்ட கலவையே "கிரைப் வாட்டர்". இது குழந்தைகள், சிறுவர்களுக்கு வாயு, அமிலத்தன்மை, அஜீரணக் கோளாறுகளால் ஏற்படும் வயிற்று வலிக்கு சிறந்த நிவாரணம் தருகிறது. சதகுப்பை எண்ணெய் வயிற்று வலியை குறைக்கும் என்று அறியப்படுகிறது. அதேபோல சர்ஜி காக்ஷரா வயிற்றிலுள்ள அமிலத்தன்மையை சமநிலைப்படுத்துகிறது.

பொதுவாக நான்கில் ஒரு குழந்தைக்கு கோலிக் எனப்படும் வயிற்று வலி உண்டாகிறது. குழந்தைகளின் ஆரம்ப வருடங்களில் உண்டாகும் இந்த வலி அவர்கள் வளரும்போது தானாகவே சரியாகி விடும்.

வயிற்று வலியினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சரியாக தூங்க முடியாமல், அதிக சோர்வுடன் காணப்படுவார்கள். அவர்களின் அழுகை நீண்ட நேரத்திற்கு நீடிக்கும். ஒரு நாளில் மூன்று மணி நேரம் கூட நீடிக்கும், ஒரு குறிப்பிட்ட முறையில் மீண்டும் வலி வரும். கோலிக்கினால் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தை வாரத்தில் மூன்று நாட்களுக்கு இதுபோன்ற அறிகுறியை வெளிப்படுத்துவார்கள். அதனால், நாம் முன்கூட்டியே அதனை அறிந்து கொள்ள முடியும். அழுகை நின்ற பிறகும், குழந்தை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் செய்யும், இதனால் குழந்தை தூங்க முடியாமல் தவிக்கும்

அறிமுகப்படுத்தப்பட்ட குறுகிய காலத்திற்குள்ளேயே உட்வேர்ட்ஸ் கிரைப் வாட்டர் எப்படி அனைவரின் வீட்டிலும் ஒரு அங்கமாக மாறியது என்பதை பற்றி அந்நிறுவனம் பகிர்ந்து கொண்டுள்ளது. அதன்படி,"இந்தியாவில் உட்வேர்ட்ஸ் கிரைப் வாட்டரின் பயணம், 1930-ம் ஆண்டு டிடிகே ஹெல்த் கேர் நிறுவனம் அதனை இங்கே இறக்குமதி செய்ததன் மூலம் தொடங்கியது. 100 சதவீதம் ஆயுர்வேத தயாரிப்பான உட்வேர்ட்ஸ் கிரைப் வாட்டர், குழந்தைகளுக்கு அஜீரணக் கோளாரால் ஏற்படும் வாயு, அமிலத்தன்மை போன்றவைகளை நீக்குகிறது.

மருத்துவ ஒழுங்குமுறை ஆணையங்கள் அனுமதித்தைவிட குறைவான அளவு பிரேசர்வ்டிவ்ஸ் தங்களின் பொருட்களில் இருப்பதை உட்வேர்ட்ஸ் கிரைப் வாட்டர் தொடர்ந்து உறுதி செய்து வருகிறது. ஆல்கஹால் என்பது குழந்தைகளுக்கு கொடுக்க முடியாத ஒரு பொருள், உட்வேர்ட்ஸ் கிரைப் வாட்டரில் ஆல்கஹால் துளியும் இல்லை. இது பல்வேறு அமைப்புகளால் சோதனை செய்யப்பட்டு, சான்றளிக்கப்பட்டுள்ளது.

கிரைப் வாட்டர் அஜீரணக் கோளாறுகளால் ஏற்படும் தொல்லைகளுக்கு மிகச்சிறந்த தீர்வாகும். கிரைப் வாட்டரில் கலந்துள்ள இயற்கையான உட்பொருள்கள் குழந்தையின் வயிற்று எரிச்சலுக்கு ஒரு சிறந்த நிவாரணியாக செயல்படுகிறது.

இதனால் உட்வேர்ட்ஸ் கிரைப் வாட்டர் உலகிலுள்ள கோடிக்கணக்கான தாய்மார்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது. குழந்தைகளின் வயிறு தொடர்பான பிரச்சினைகளுக்கு எளிய தீர்வாக விளங்குகிறது.