அமுல் (Amul) உருவான வரலாறு

     Amul  என்றால் சமஸ்கிருத மொழியில் "விலை மதிப்பற்றது " என்பது பொருள்.  ஆனால் நாம் பெரும்பாலும் அறிந்த Amul  நிறுவனம் உணவுப் பொருள் உற்பத்தியில் இந்தியாவின் ஒரு முன்னணி நிறுவனமாகும்.  நாட்டின் பால் உற்பத்தியில் அமுல் நிறுவனத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது.  இந்தியாவில் தயாரிக்கப்படும் பால் பொருட்கள் பல்வேறு நாடுகளுக்கு இந்நிறுவனத்தின் மூலமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது.  நம் நாட்டின் அந்நிய செலாவணி வருவாய் அதிகரிக்கக் காரணமானது இந்நிறுவனம். 

     Amul (Anand  Milk  Producers  Union Limited ) என்பது இந்திய மாநிலமான குஜராத்தில் ஆனந்த் எனும் ஊரைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் ஆனந்த் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் ஆகும்!


அமுலின்  தோற்றம் 

   முதன் முதலாக Amul  நிறுவனத்தை உருவாக்கியவர் திரிபுவந்தாஸ் கிரிஷிபாய் படேல் ஆவார்.  அவர் இந்தியாவில் கூட்டுறவு இயக்கத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.  1940 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சர்தார் வல்லபாய் படேலின் வழிகாட்டுதலுடன் கெடா மாவட்டத்தில் விவசாயிகளுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். அதற்கென யூனியன் அமைத்து வெர்கீஸ் குரியன் (Verghese Kurien ) என்பவரை மேலாளராக 1950 ஆம் ஆண்டு பணியமர்த்தினார்.





     வெர்கீஸ் குரியன் பின் வரும் நாட்களில் அமுலுடன் ஒன்றிவிட்டார். திரிபுவந் தாஸ் , தான் நிறுவிய அறக்கட்டளையின் பொறுப்பைக் கவனித் தொடங்கினார்.  எனவே அமுல் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பு வெர்கீஸ் குரியனுக்கு  கிடைத்தது.  1946, டிசம்பர் 14 -இல் அமுல் கூட்டுறவு நிறுவனம் பதிவு செய்யப்பட்டது.  1970 ஆம்  ஆண்டு இந்தியாவின் வெண்மைப்  புரட்சிக்கு இந்நிறுவனம் தலைமைத் தாங்கியது .

இந்தியாவின் பால்காரர் 

     வெர்கீஸ்  குரியன் , இந்திய வெண்மைப்  புரட்சியின் தந்தை என்று அழைக்கப்பட்டார்.  இந்தியாவின் பால்காரர் என்றும் சிலர் கூறுவதுண்டு.  கோழிக்கோட்டில் பிறந்த இவர் சென்னை லயோலாக்  கல்லூரியில் 1940 ஆம் ஆண்டு இயற்பியலில் இளங்களைப் பட்டம் பெற்றவர்.  சென்னைப் பல்கலையில் இயந்திரவியல் பொறியியல் பட்டம் பெற்றார்.

     1946 ஆம் ஆண்டு ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா எஃகு தொழில் நுட்ப நிலையத்தில் பட்ட மேற்படிப்பை முடித்தார்.  பின்னர் அரசு உதவித்தொகையில் அமெரிக்காவின் மிக்சிகன் மாநிலப் பல்கலைக் கழகத்தில் படித்து இயந்திரவியல் பொறியியலில் எம்.எஸ் பட்டத்தை சிறப்பு நிலையில் பெற்றார்.


     இந்தியா வந்தபிறகு, மே 1949 ஆம்  ஆண்டு ஆனந்த் அரசு பால்பண்ணையில் பொறியாளராகச் சேர்ந்தார்.  அதே நேரம் திரிபுவந் தாஸ்  துவங்கிய கூட்டுறவு பால்பண்ணை (கைரா மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம்) தனியாரிடம் இருந்த பொல்சன்  பண்ணையுடன் போட்டியிட்டு தோற்றுக்  கொண்டிருந்தது.





      அரசுப் பணியில் சவால்கள் இல்லாமல் வெறுத்திருந்த குரியனுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது.  கைரா பால் சங்கத் தலைவர் திரிபுவந் தாஸ் படேலிடம் பால் பதப்படுத்தும் ஆலையை நிறுவிட  உதவுவதாகக் கூறினார் குரியன்.  இதுவே Amul (அமுல்) பிறக்க வழி வகுத்தது.  மேலும் தேசிய பால் பண்ணை மேம்பாட்டு வாரியம் குஜராத்தில் உதயமானது.


     பால் பண்ணை மேம்பாட்டிற்காக குரியனுக்கு  இந்தியாவில் மட்டுமின்றி பிற நாடுகளிலும் உயரிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.


1. 1963 இல்  சமூக தலைமைக்காக ரமன் மக்சேசே விருது .

2. 1965 இல் பத்மஸ்ரீ  விருது 
3. 1966 இல் பத்ம பூஷன் விருது 
4. 1986 இல் இந்திய குடியரசுத் தலைவரிடம் இருந்து கிருஷி இரத்னா விருது 
5. 1986 இல் கார்னெகி நிறுவனத்திடமிருந்து வாடேலர் அமைதிப்  பரிசு 
6. 1989 இல் உலக உணவுப் பரிசு 
7. 1993 இல் பன்னாட்டு மனிதர் - உலக பால்பண்ணை கண்காட்சி , மாடிசன், ஐக்கிய அமெரிக்கா .
8. 1999 இல் பத்ம விபூஷண் விருது 
9. 2007 இல் கரம்வீர் புரஸ்கார்.


Dr. Verghese kurien's quotes:


    " The backward sections of society in India have been exploited and ill-treated for many years.  Therefore, there is a need to make up for it (the ill-treatment)"


     "Indian needs to show an honest face, a kind face, a human face - and not an arrogant face as the powerful nations of today."


 His philosophy in life is


     "To do as much good as I can to those who are less fortunate, but I would like to live my life as a common man".


     "Life is a privilege and to waste it would be wrong. In living this privileged "Life", you must accept responsibility for yourself, always use your talents to the est of your ability and contribute somehow to the common good".


    "We must build on the resources represented by our young professionals and by our nation's farmers.  Without their involvement, we cannot succeed. With their involvement we cannot fail."


     "India's place in the sun would come from the partnership between wisdom of its Rural people and skills of its professionals".


     "A person who does not have respect for time, and does not have a sense of timing, can achieve little".


     "Unfortunately, we forgot that the biggest asset of India is its people.  Any sensible government must learn to unleash the energy of its people and get them to perform instead of trying to get a bureaucracy to perform".


     "We Indians are an extremely intelligent people but we can progress as a nation only when we learn the secret of unleashing this positive power of the people.  Whenever this happens it disturbs a lot of people because they know that a giant is waking up".


     "For those who believe, no explanation is necessary; for those who do not, no explanation is possible. I".


Books he wrote


1. I Too Had a Dream in 2005

2. An Unfinished Dream in 1997
3. Syrian Christian Names from Kerala

தொலைபேசி (Telephone) உருவான வரலாறு

     Telephone எனும் வார்த்தை கிரேக்க மொழியில் இருந்து பெறப்பட்டதாகும்.  Tele என்றால் 'தூரம்'Phone என்றால் 'சப்தம்', 'குரல்' என்பது பொருள். தொலைபேசி என்பது ஒரு தொலைதொடர்பு சாதனமாகும்.

     அமெரிக்க குடியுரிமைப் பெற்ற ஸ்காட்லாந்து நாட்டின் ஒரு காது கேளாதோர் பள்ளி ஆசிரியரின் மகனாகப் பிறந்தவர் அலெக்சாண்டர் கிரகாம்பெல்.  எடின்பர்க் நகரில் மார்ச் 3, 1847 ஆம் ஆண்டு பிறந்தவர் பெல்.

     அவருடைய தந்தை அலெக்சாண்டர் மெல்வில் பெல் ஆவார்.  இவர் ஒரு ஒலிப்பு நிபுணர் (Phonetician).  'கோட் '  வார்த்தைகளைக் கண்டுபிடித்தவர். பெல்லின் தாய் ஒரு காது கேளாதவர்.  தாயின் காது கேளா தன்மையே பெல்லை ஒலியியல் படிக்க வழிவகுத்தது எனலாம்.

     இலத்தீன், கிரேக்க மொழிகளைப் படிப்பதைவிட பியானோ வாசிப்பதிலும், ஒலி அலைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்வதிலும் தனது நேரத்தைப் போக்கினார் பெல்.  பேச்சை மின் ஒலியாக மாற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது வந்த காது கேளாத பெண்ணை விரும்பி திருமணம் செய்து கொண்டார்.


     பல தந்திகளை அனுப்பும் 'ஹார்மோனிக் டெலிகிராப்' முறையில் சப்தங்கள் எப்படி உருவாகின்றன என்பதைக் கண்டறிந்தார்.


     பியானோவில் ஒலி எழுப்பி மின்சாரம் மூலமாக அந்த இசையை ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு அனுப்பினார் பெல்.  தந்திமுறையில் வெறும் ஒலிகள் மட்டுமே அனுப்பப்பட்டன.  பேச்சுகளையும் அந்த முறையில் அனுப்பலாமே என்று 18 வயதிலேயே பெல்லிற்குத் தோன்றியது.  அதனால் அந்த முயற்சிகளில் ஈடுபட்டார்.




பெல்லின் கைகளால் வரைந்த வரைபடம் 
     
     அக்காலத்தில் மனிதனின் பேச்சொலிகளை ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு தந்திகள் மூலம் அனுப்பப்பட்டு வந்தது . அந்த முறைகள் இவருடைய ஆராய்ச்சிக்கு மிகவும் உதவியாய் இருந்தன.  1875 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மின்சாரம் மூலம் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பேச்சு ஒலியை அனுப்பும் முயற்சியில் வெற்றி பெற்றார்.  அவ்வாறு அனுப்பிய பேச்சொலி தெளிவில்லாமல் இருந்தது.  






     1876 ஆம் ஆண்டு பெல் தனது உதவியாளர் தாமஸ் வாட்சன் உதவியுடன் தொலைபேசியைக் கண்டுபிடித்தார்.  'மிஸ்டர் வாட்சன் இங்கே வாருங்கள்.  நான் உங்களைக் காண வேண்டும் (Mr. Watson, come here, I want to see you)'.  இதுதான் தொலைபேசியில் முதன் முதலாக பேசப்பட்ட வாக்கியம். 1876 ஆம் ஆண்டு பெல் தனது Telephone - னுக்கு காப்புரிமையைப் பெற்ற போது அவருக்கு வயது 29.

    இதே காலகட்டத்தில் எலிசாகிரே எனும் அமெரிக்கர் Telephone போன்றே ஒன்றைக் கண்டுபிடித்தார்.  தாமஸ் ஆல்வா எடிசன் கூட இதேபோல் ஒன்றைக் கண்டுபிடித்தார்.  ஆனால், Telephone -ஐ முதன் முதலாகக் கண்டுபிடித்தவர் என்று காப்புரிமை பெற்றவர் பெல்தான்.


     1877இல் தன் உதவியாளர் வாட்சனுடன் சேர்ந்து "பெல் தொலைபேசி கம்பெனி" என்ற பெயரில் தொலைபேசி நிறுவனம் ஒன்றை நிறுவினார்.  தொலைபேசியைக் கண்டுபிடித்ததற்காக பிரெஞ்சு அரசு அவருக்கு 50,000 பிராங்க் பரிசுத் தொகையை வழங்கியது.  அந்த பரிசுத் தொகையைக் கொண்டு வோல்டா ஆய்வுச் சாலை (Volta Laoratory) என்ற பெயரில் ஓர் அமைப்பை நிறுவினார்.


     தனிப்பட்ட முறையிலும் பிற அறிவியல் அறிஞர்களுடன் சேர்ந்தும் 59 கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமையை பெல் பெற்றுள்ளார்.  1882 ஆம் ஆண்டு பெல் அமெரிக்கக் குடியுரிமைப் பெற்றார்.  தன் வாழ்நாளின் பிற்பகுதியை இங்குதான் கழித்தார்.  ஆகஸ்ட் 2, 1922 ஆம் ஆண்டு கேப் பிரிட்டன் தீவிலுள்ள எஸ்டேட்டில் காலமானார்.  அன்றைய தினம் அமெரிக்க அரசு, அமெரிக்கா முழுவதும் 5 நிமிடங்கள் டெலிபோன் சேவையை நிறுத்தி, பெல்லிற்கு மரியாதை செலுத்தியது.

கிரகாம் பெல்லின் கையெழுத்து 




சானடோரியம்(Sanatorium) உருவான வரலாறு

    
     Sanatorium என்ற சொல்லுக்கு பிணி நீக்குவதற்கான இல்லம் என்று அகராதி பொருள் தருகிறது. Sanatorium என்பது அரிதாக சானிட்டோரியம் என்றும் அழைக்கப்படுகிறது.  நீண்ட கால நோய்களை நீக்குவதற்கான வசதிகளைக் கொண்ட மருத்துவ இல்லம் இந்த சானடோரியம் ஆகும்.  இது பொதுவாக நுண்ணுயிர் எதிர்ப்பிகள் (Antibiotics) கண்டுபிடிப்பதற்கு முன் 19 மற்றும் 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்I காசநோய் (Tuber Culosis - TB) சிகிச்சையுடன் தொடர்புடைய சொல் ஆகும்.
     
     சானடோரியாவின் முதல் ஆலோசனை, 1836 ஆம்  ஆண்டு இங்கிலாந்தில் உள்ள சுட்டன்  கோல்ட் பீல்டில் (Sutton Cold Field) ஒரு சுகாதார நிலையம் திறக்கப்பட்டது.  இதை நிறுவியவர் ஜார்ஜ் போடிங்டன்  (George Bodington) ஆவார்.  இதில் நோயாளிகள் நீண்ட காலம் தங்கி சிகிச்சைப் பெற்றனர்.   1840 ஆம் ஆண்டு "நுரையீரல் நுகர்வு சிகிச்சை மற்றும் குணப்படுத்துதல்" என்ற கட்டுரையை வெளியிட்டார் .  இவருடைய அணுகுமுறை மற்றும் கருத்துகள்  விமர்சகர்களால் நிராகரிக்கப்பட்டது.  இதனால் இவருடைய சுகாதார நிலையம் புகலிடமாக மாற்றப்பட்டது.


டாக்டர் சவ்ரிமுத்து 

     டாக்டர் டேவிட்  ஜேக்கப் ஆரோன் சவ்ரிமுத்து  (Dr. David Jacob Aaron Chowry Muthu) என்பவர் தனியார் காசநோய் நிபுணர்.  இவர் 1864ல் பிறந்தவர். இங்கிலாந்தில் எம்.டி., எம்.ஆர்.சி.எஸ் (MD and MRCS) பட்டம் பெற்றவர்.  1891 ஆம் ஆண்டு பிரிட்டிஷாய்ச் சேர்ந்த பெண்ணான போக்ஸ் என்பவரை மணந்தார்.




  காசநோய் உள்பட நெஞ்சக மருத்துவத்தில் கைதேர்ந்தவராக சவ்ரிமுத்து இருந்தார். சுற்றுப்புறத் தூய்மை, தூய காற்றை சுவாசித்தல் போன்ற விழிப்புணர்வுடன் கூடிய சிகிச்சையை அளித்துவந்தார் . 1900 ஆம் ஆண்டு இங்கில்வுட் சானடோரியத்தின் (Inglewood Sanatorium at the Isle of Wight) பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.


      1910ஆம் ஆண்டு சாமர்செட் (Somerset) பகுதியில் உள்ள மெண்டிப்  மலைப்பகுதியில் (Mendip Hills) சானடோரியம் (Hill Grove Sanatorium) ஒன்றை நிறுவி காசநோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்தார்.  சானடோரியம் அமைத்து சிகிச்சை அளிப்பதில் சிறப்பு நிபுணத்துவம் பெற்றவராக விளங்கினார் சவ்ரிமுத்து .




     1917ஆம் ஆண்டில் விரிவடையாத அந்த சுகாதார 
நிலையத்தில் அவரது உயர் நோயாளிகளில் ஒருவராக, கணிதவியலாளர் சீனிவாச ராமானுஜன் இருந்தார். டாக்டர் சவ்ரி முத்துவின் மற்றுமொரு நண்பர் மகாத்மா காந்தி ஆவார்.  அவர்கள் இயற்கையாக குணப்படுத்துதல் குறித்த தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். அந்த செல்வாக்கின் காரணமாக சவ்ரிமுத்து இந்தியாவிற்கு வரத் தொடங்கினார். அப்பொழுது காசநோய் நோயாளிகளுக்கு ஒரு சுகாதார நிலையம் தொடங்கும் எண்ணம் அவருக்குத் தோன்றியது.

     அதன் விளைவாக தாம்பரத்தில் பச்சை மலை அடிவாரத்தில் 250 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தினார்.  ஏப்ரல் 9, 1928 ஆம் ஆண்டு 12 படுக்கைகளுடன் கூடிய சுகாதார நிலையத்தை அமைத்தார்.  அன்றைய சுகாதார அமைச்சர் சி.பி. இராமசாமி அய்யர் தொடங்கிவைத்தார்.  பின்னர் ஒரு நாள் சவ்ரி முத்துவின் மனைவி இங்கிலாந்தில் மரணமடையவே அவர்  மீண்டும் இங்கிலாந்து செல்ல நேர்ந்தது .  அதனால் அவர் தாம்பரம் சானடோரியத்தை 1937 ஆம் ஆண்டு மார்ச் 24 அன்று அரசிடம் விற்றார்.  மாநில அரசால் கையகப்படுத்தப்பட்டு சுகாதார நிலையமாக மாற்றப்பட்டது.






      அரசு ஏற்று நடத்தியப்  பின்னர் சானடோரியத்தில் அறுவை சிகிச்சை அரங்கு, எக்ஸ்ரே வசதி, ஆய்வக வசதி, படுக்கை வசதி ஆகியவை உருவாக்கப்பட்டன.  இரண்டாம் உலகப் போர் நடந்த காலகட்டத்தில் இந்த சானடோரியம் மிகப் பெரிய வளர்ச்சி அடைந்தது.  நாடு விடுதலைப் பெற்ற பிறகு மத்திய அரசு தாம்பரம் சானடோரியத்தில் காசநோயாளிகளுக்கான மறுவாழ்வு மையத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.  அங்கே தங்கியிருந்த நோயாளிகளுக்குத் தொழில் வாய்ப்புகளும் வழங்கப்பட்டன. 1976 ஆம் ஆண்டு 750 படுக்கை வசதிகளுடன் சானடோரியத்தைத் தமிழக அரசு விரிவுபடுத்தியது.

   
 1993 ஆம் ஆண்டு எய்ட்ஸ் நோய் அறிகுறிகளுடன் காசநோய்க்காக இங்கே தங்கி இருவர் சிகிச்சை பெற்றனர்.  அப்போதுதான் எய்ட்ஸ் நோயாளிகளுக்கெனத் தாம்பரம் சானடோரியத்தில் சிகிச்சை தொடங்கியது .  அத்துடன் அதன் கண்காணிப்பாளராக புகழ்பெற்ற மருத்துவர் செ .ந. தெய்வநாயகம் இருந்தபோது எய்ட்ஸ் நோயாகிகளுக்கு அலோபதி - சித்த கூட்டு மருத்துவ சிகிச்சை வெற்றிகரமாக அளிக்கப்பட்டது.  தற்போது 'தாம்பரம் டிபி சானடோரியம்' என்று அறியப்படும் இந்த மருத்துவமனை தமிழகத்திலேயே காசநோயாளிகளுக்கென பிரத்தியேகமான மருத்துவமனையாகச் செயல்பட்டு வருகிறது.  இந்தியாவின் மிகப் பெரிய எய்ட்ஸ் நோய்  மையமாகவும் தாம்பரம் சானடோரியம் உள்ளது.



   பிரிட்டிஷ் இந்தியாவில் குடில்களுடன் தொடங்கிய இந்த சானடோரியம் , இன்று சென்னையின் முக்கிய அரசு மருத்துவமனையாகவும் கிரேட்டர் சென்னையின் தனி அடையாளமாகவும் உருவெடுத்துள்ளது.