கார்ல் பிரெட்ரிச் காஸ் என்பவர் 1777 ஆம் ஆண்டு பிரன்ஸ்விக் (Brunswick) என்னும் ஊரில் பிறந்தார். இவரின் தந்தை கெப்ஹார் காஸ் (Gabhard Gauss) இவரின் தாய் டெரோதியா பென்ஸ் (Dorothea Benze) ஆவார். காஸின் தந்தை ஒரு கூலித் தொழிலாளி. தன் தந்தையின் கணக்கிடும் திறனில் இருந்த தவற்றை காஸ் மூன்று வயது குழந்தையாக இருக்கும்போதே திருத்தினார். காஸ் தன் புத்திக் கூர்மையை தன் தாயிடமே பெற்றதாக கூறினார்.
1784 ஆம் ஆண்டு இவர் பள்ளியில் சேர்க்கப்பட்டார். இவருடைய ஆசிரியர் புட்னர்(Buttnner) மாணாக்கரைச் செயல்பட வைப்பதற்காக 1 முதல் 100 வரை கூட்டுத் தொகையைக் காணச் சொன்னார். அதிக நேரம் ஆகும் என்று ஆசிரியர் இருந்தபோது, காஸ் உடனே விடை கூறிவிட்டார். அதற்கான விளக்கத்தையும் தந்தார். 1+100 =101, 2+99=101, எனவே 50*101=5050 என்று கூறினார். இவர் திறமைகளைக் கண்டு இவருக்காக சில புத்தகங்களை வரவழைத்தார். ஆசிரியரின் உதவியாளரான மார்டின் பார்ட்ல்சும் காசிடம் தனி கவனம் செலுத்தினார். பார்ட்ல்சும் கணித வல்லுநர். இவர் காசன் (Kazan) பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக பணியாற்றினார்.
காஸ் 1788இல் இடைநிலைக் கல்வி பயில, பள்ளியில் சேர்ந்தார். 1791இல் அவருக்கு அரசின் படிப்பு உதவித் தொகை கிடைத்தது. இடைநிலைக் கல்வியில் சிறந்து விளங்கியமையால் காஸ் 'Collegium Carolinum) என்ற நிறுவனத்தில் சேரத் தேர்ந்தெடுக்கப் பட்டார். 1792 முதல் 1795 வரை காஸ், நியூட்டன், யூலர் ,லெக்ரான்ஜ் ஆகியோரின் ஆராய்ச்சிகளைப் படித்தறிந்தார் .
ஆராய்ச்சி
இவர் கூட்டு, பெருக்கல் சராசரியில் (Arithmetic Geometric Mean) நிறைய ஆராய்ச்சிகள் செய்தார். காஸ் பிரன்ஸ்விக்கிலிரு கோட்டின் ஜென் சென்றார். அங்கு உள்ள நூலகம் அவருக்கு மிகவும் பயன்பட்டது. அங்கு ஒழுங்கு பல கோணத்தின் அமைப்பு பற்றியும் (construction of regular polygon ) இயற்கணித அடிப்படை தேற்றத்தின் நிரூபணம் ஆகியவற்றையும் கண்டுபிடித்தார் .
காஸ் 1798-ல் பிரன்ஸ்பர்க் திரும்பினார். 1807 வரை அங்கு இருந்தார். 1798இல், 21 வயதிலேயே சிறந்த ஒரு நூலை எழுதி முடித்தார். ஆனால் அது 1801 இல் தான் வெளியிடப்பட்டது. இது மாபெரும் படைப்பாகும்.
1799 இல் டாக்டர் பட்டம் பெற்றார். 1807 இல் காட்டிங்கன் பல்கலைக் கழகத்தில் கனிதப் பேராசிரியராகவும் காட்டிங்கன் வானியல் ஆய்வுக் கூடத்தின் இயக்குனராகவும் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். பல கணித புத்தகங்களை எழுதியுள்ளார்.
பிற்காலங்களில் காஸ் கணிதத்தின் அனைத்து பிரிவுகளிலும் திறமையை நிரூபித்தார். குறிப்பாக convergence என்ற குவிதல் பற்றிய உண்மைகளை வெளிக் கொணர்ந்தவர் ஆவார்.
கணிதச் சாதனைகள்
இவர் சாதனைகள் எண்ணிலடங்கா. சில உதாரணங்கள் காண்போம்:
- 1796 இல் குறிப்பிட்டப் பல்கோணங்களை காம்பஸ் மற்றும் அளவு கோல் கொண்டு வரையும் முறையைக் கண்டுபிடித்தார். இத்தகைய கணக்குகள் பழமையான கிரேக்கர் காலம் முதல் முயற்சி செய்யப்பட்ட ஒன்று.
- 17 பக்கப் பல கோணத்தை அமைத்துக் காட்டினார்.
- எண்ணியலில் பல புதுமைகளைக் கண்டுபிடித்தார்.
- பகா எண் தேற்றத்தை அனுமானித்தார்.
- எந்த ஒரு நேர் முழுவும் அதிகபட்சமாக மூன்று முக்கோண எண்களின் கூட்டுத்தொகையாகக் காட்டலாம் என்று கண்டு பிடித்து, தன் நாட்குறிப்பில் எழுதி மகிழ்ந்தார்.
- வான இயலில் பல கண்டுபிடிப்புகளுக்கு உதவி, காட்டிங்கன் வானாய்வகத்தின் இயக்குநராகப் பணியாற்றினார்(1807).
- யூக்ளிடியன் அல்லாத வடிவியலைக் கண்டுணர்ந்து, அதை வெளியிடாததால் பொல்யாய் (J .Bolyai) என்பவர் இதைக் கண்டுபிடித்து 1829இல் அறிவித்தார். எனினும் இதற்கு முன்னரே காஸ் இதைப்பற்றி அறிந்திருந்தார்.
- புவிப் பரப்பு பற்றிய நில அளவையை (Geodesic Survey ) செய்தார். இது கணிதத்தின் ஒரு பிரிவாகும். அதன் அடிப்படையில் வகை வடிவியலை உருவாக்கினார்.
- வெபர் (W .Weber) என்ற இயற்பியல் பேராசிரியருடன் சேர்ந்து காந்த இயல் பற்றிய ஆராய்ச்சிகள் செய்தார்.
- இயற்கணிதத்தின் அடிப்படைத் தேற்றத்திற்கு நிரூபணம் கண்டறிந்தார்.
- கலப்பு எண் அல்லது சிக்கல் எண் முறையைக் கண்டுபிடித்தார். √-1 என்பதற்கு i -ஐப் பயன்படுத்தினார்.
- இயல்நிலைப் பரவல் வளைவு (Normal distribution curve ) இவர் பெயராலேயே அழைக்கப் படுகிறது. இது பற்றி ஆராய்ந்து விளக்கியவர் இவர்.



