இந்திய ரூபாயின் பணக் குறியீடு







    தேவநாகரி எழுத்து ர ( र ) மற்றும் ரோமானிய பெரிய எழுத்து R ஆகியவற்றைப் பயன்படுத்தி வடிவமைக்கப் பட்டுள்ளது. மேலும் இந்தியில் ரூபியா மற்றும் ஆங்கிலத்தில் ரூபாய் என்ற வார்த்தையிலிருந்து பெறப்பட்டுள்ளன.  எனவே இந்த சின்னம் இந்தியர்களுக்கும் சர்வதேச பயனர்களுக்கும் அர்த்தமுள்ளதாக இருக்கிறது.  மேலும் Shrio Rekha (The horizontal line of Devanagri Script ) வை குறிப்பதாகவும் உள்ளது ( र ).  இந்தியாவின் மூவண்ண கொடியைக் ( ₹ ) குறிப்பதாகும்.  மேலும் Arithmetic sign 'equal to' (சமமான) = வையும் குறிக்கிறது.

    


                                                                                                                                                                                                                                                                                                                                                          





                                       

                 

      

       

                                 

            

       

    2009 ஆம் ஆண்டு இந்திய அரசு இந்திய ரூபாய்க்கு ஒரு குறியீடு உருவாக்கும் போட்டியை அறிவித்தது. 2010 ஆம் ஆண்டு இந்திய வரவு செலவுத் திட்டக் கணக்கின் போது நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இந்திய ரூபாய்க்குக் குறியீடு வேண்டும் என்பதை முன் மொழிந்தார்.  அக்குறியீடு இந்தியப்  பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் பறைசாற்றுவதாகவும் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.  இந்தப் போட்டியில் மொத்தம் 3331குறியீடுகள் பெறப்பட்டன.  இதிலிருந்து ஐந்து பேருடைய குறியீடுகள் மட்டும் இறுதிச் சுற்றுக்கு அனுப்பப்பட்டது.


                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        

    

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    











    இறுதியாக ஜுலை 15, 2010 அன்று அமைச்சரவைக் கூட்டத்தில் உதயகுமார் உருவாக்கிய குறியீடு இறுதி செய்யப்பட்டது.  இவரது முயற்சிக்காக 2,50,000 பரிசத் தொகையை வழங்கினார்.






    உதயகுமார் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்.  முன்னாள் திமுக எம்.எல்.ஏ N .தர்மலிங்கத்தின் மகன் ஆவார். 

















பட்டாம் பூச்சி விளைவு

     பட்டாம் பூச்சி விளைவு என்பது நேரியல் சாரா இயக்கம் (non - linear dynamics ) என்ற இயற்பியல் பிரிவினுள் உள்ள ஒழுங்கின்மை கோட்பாடு (chaos theory ) என்ற கருது கோளினை விளக்க உருவான ஒரு சிந்தனை ஆய்வு (thought experiment ) அல்லது ஒப்புமை விளக்கம் (analogy ) எனலாம்.

    இயற்பியல் அமைப்பில் நிகழும் ஒரு விளைவுக்கு ஒரு காரணி (தூண்டல்) இருக்கும்.

    எடுத்துக் காட்டாய், பால் காய்ச்சுகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.  பாலின் வெப்பநிலை அடுப்பிலிருந்து வரும் வெப்ப ஆற்றலை பொருத்து இருக்கும்.  நிறைய வெப்ப ஆற்றலைக் கொடுத்தால் பாலின் வெப்பநிலை அதிகரிக்கும்.  குறைவான வெப்ப ஆற்றலைக் கொடுத்தால் பாலின் வெப்பநிலை குறையும்.  இதுவே தூண்டல் - துலங்கள் பண்பு.

    பாலின் வெப்பத்தையும் அடுப்பிலிருந்து வரும் வெப்ப ஆற்றலையும் ஒரு வரைபடமாக (graphplot ) வரைந்தால் அது கிட்டத்தட்ட ஒரு நேர்க்கோடாக இருக்கும்.

    இம்மாதிரியான அமைப்புகளைத்தான் நேரியல் சார் அமைப்பு என்கிறோம்.  இந்த நேரியல் அமைப்புகளில் விளைவு என்ன என்பதை காரணியின் அளவை மட்டுமே வைத்து ஊகித்துவிடலாம்.

    அதாவது இன்ன காரணத்தால் இன்ன விளைவு நடைபெற்றது என்று கூறிவிடலாம்.

    ஆனால் நேரியல் சாரா அமைப்பில் காரணி - விளைவு ஆகியவற்றின் இடையிலான தொடர்பு ஒரு எளிய நேர்க்கோட்டு வரைபடமாக இருக்காது!

    அதாவது இந்த அளவு காரணியால் இந்த அளவு விளைவுதான் ஏற்படும் என்பதை ஊகிக்க இயலாது!



    நேரியல் சாரா அமைப்புகளின் விளைவுகள் தொடக்க நிலை மதிப்புகளில் ஏற்படும் சிறிய மாற்றங்களினால் பெரிய வேறுபாட்டிற்கு உள்ளாகும்.  எனவே இதனை ஒழுங்கின்மை (chaos) என்கிறோம்.

    இப்படித் தொடக்க நிலையில் ஏற்படும் சிறிய மாற்றத்தினால் பின்வரும் விளைவில் ஏற்படும் பெரிய வேறுபாட்டை விளக்கத்தான் 'பட்டாம்பூச்சி விளைவு' என்ற கருத்தாக்கம் கையாளப்படுகிறது.

    ஓரிடத்தில் உண்டாகும் புயல் எங்கோ எப்போதோ ஒரு சிறிய பட்டாம்பூச்சி தன்  சிறகுகளை அசைத்தன் விளைவாக இருக்கலாம் என்பதே இதன் கருதுகோள். அல்லது , அந்தப் பட்டாம்பூச்சியின் சிறகசைப்பின் காரணமாய் ஓரிடத்தில் ஏற்பட இருந்த புயல் ஏற்படாமலே போய்விட்டது என்று கொள்ளலாம்.  இதனால், பட்டாம் பூச்சிகள் புயலை உருவாக்குகின்றன என்பது பொருளல்ல  தொடக்க நிலையின் சிறிய வேறுபாடுகள் பின்வரும் விளைவில் பெரிய வேறுபாடுகளாக அமையும் என்பதே இதன் கருத்து!

    ஒழுங்கின்மைக் கோட்பாட்டின் தந்தையான Edward Norton Lorenz 1963 இல், இதை 

    "பிரேசில் நாட்டில் பறந்து கொண்டிருக்கும் ஓர் வண்ணத்துப் பூச்சியின் சிறகின் படபடப்பினால் ஏற்படும் சலசலப்பிற்கும், டெக்ஸாசில் ஏற்படும் சூறாவளிக்கும் தொடர்பு உண்டு" என்கிறார் .

    இக்கருத்தை அவர் கணித முறைப்படியும் வானிலை மாற்றங்களின் படியும் சரியென்று நிறுவிக் காட்டினார்.  இதன் காரணமாக உருவான தத்துவமே 'வண்ணத்துப்பூச்சி விளைவு' என்கின்ற Butterfly Effect .

    இதை எவ்வாறு கண்டறிந்தார் எனில் இவர் ஒரு வானியியலாளர்.  வானிலையை கணிப்பதற்காக ஒரு Simulation tool கண்டறிந்தார்.  இதுவரை நடந்த காலநிலை மாற்றங்களை வைத்து அடுத்த 2 மாதங்களுக்கான காலநிலையைக் கண்டறிந்தார். முதலில் அனைத்தும் நன்றாகவே இருந்தது.  பிறகு மீண்டும் value களை Insert செய்துவிட்டு 2 மணி நேரம் கழித்து பார்க்கும் பொழுது மிகப்பெரிய சூறாவளி வரும் என்பதை அறிந்தார்.  இது எவ்வாறு நடக்க இயலும் என்று சிந்தித்தார்.  பிறகுதான் கண்டறிந்தார் அவர் முதலில் கொடுத்த value 0.506 ஆனால் இரண்டாவதாக கொடுக்கப்பட்ட value 0.506.127 என்பதாகும்.  அந்த 0.000.127 என்கின்ற அளவு மிகப் பெரிய சூறாவளியை ஏற்படுத்தும் என்பதை கண்டறிந்தார்.  இதன் மூலமாக அவர் Butterfly Effect  - ஐ கண்டறிந்தார்.

எடுத்துக்காட்டாக:

    1. 96 திரைப்படத்தில் விஜய் சேதுபதி த்ரிஷாவிடம் நீ படித்த கல்லூரிக்கு  உன்னைத் தேடி நான் வந்தேன். ஒரு பெண்ணிடம் என் பெயரைச் சொல்லி உன்னிடம் சொல்லச் சொன்னேன். நீ என்னைப் பார்க்க விருப்பமில்லை என்று திட்டியதாகக் கூறினார்.  நானும் அதை நம்பி அங்கிருந்து கிளம்பிவிட்டேன் என்று கூறுவார்.

    உடனே த்ரிஷா வியப்போடு பதில் கூறாமல் அழுதுகொண்டே தன் அறைக்கு சென்று விடுவார்.  விஜய் சேதுபதியும் பின் தொடர்ந்து செல்வார்.

    தன்னை சமாதானப் படுத்திக்கொண்டு அன்று கல்லூரியில் நடந்ததைத் தெளிவு படுத்துவார் த்ரிஷா.  அந்த பெண் உன் பெயரைச் சொல்லவில்லை.  நானும் என்னைப் பின் தொடர்ந்து வரும் வேறொரு நபர் என எண்ணி திட்டி அனுப்பிவிட்டேன் என அழுது கொண்டே விஜய் சேதுபதியிடம் கூறுவார்.

    இந்த கதையில் ராமச்சந்திரன் என்னும் பெயர் நியாபகத்திற்கு வராமல் போனது மறதி என்னும் காரணி. அந்த காரணியின் விளைவு இவர்கள் பிரிய நேரிட்டது. அந்த பெண் பெயரை சொல்லாமல் மறந்த ஒரு சின்ன செயல் இவர்கள் பிரிய வேண்டும் என்ற பெரிய விளைவை ஏற்படுத்தியுள்ளது.

    2. ஆஸ்திரியா நாடு கலைகளுக்கு புகழ் பெற்ற நாடு.  வியன்னா நகரில் அகாடமி ஆப் பைன் ஆர்ட்ஸ் (Academy of Fine Arts ) - இல் bohemian arts பயில ஒரு மாணவன் விண்ணப்பம் செய்தான்.  துரதிஷ்ட வசமாக அவனுடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.  மறுமுறை விண்ணப்பித்தப் போதும் நிராகரிக்கப்பட்டது.

    இதன் விளைவாக பின்னாளில் அந்த நாட்டுக்கு வரவிருந்த அழிவு தெரிந்திருந்தால் அந்த மாணவனின் விண்ணப்பத்தை மதிப்பீடு செய்த பேராசிரியர் அதை நிராகரித்திருக்க வாய்ப்பே இல்லை என்று சொல்லலாம்.

    அதனால் மனமுடைந்த அந்த மாணவன் தான் கலைஞன் ஆக வேண்டும் என்ற கனவை விடுத்து ஜெர்மன் ராணுவத்தில் படைவீரனாக சேர்ந்தான். அந்த மாணவன் அடால்ப் ஹிட்லரால் உலகம் எத்தகைய பேரழிவைச் சந்தித்தது என்பது அனைவரும் அறிவர்.

    இதில் ஹிட்லர் பொஹெமிய கலைஞராக ஆகியிருந்தால், ஜெர்மன் ராணுவத்தில் சேர்ந்திருக்க மாட்டார். ராணுவத்தில் சேராதிருந்திருந்தால் இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்திருக்காது.

    உலகம், வாழ்க்கை, அறிவியல் என நம்மைச் சுற்றி இருக்கும் அனைத்தும் ஒரு சிக்கலான நேரியல் அல்லாத அமைப்பு (Non - Linear system ).  அதில் நடக்கும் ஒரு சிறிய மாற்றம் கூட அந்த அமைப்பை வெகுவாக பாதிக்கும்.

    3. ஆயிரத்தோர் இரவு கதைகள் என்ற அரேபிய கதை ஒன்றை நீங்கள் அறிந்திருக்கலாம்.  

    இந்த கதை உருவாகக் காரணம் என்ன தெரியுமா?

    ஒரு அரேபிய மன்னன் தன் மனைவியால் ஏமாற்றப் படுகிறான்.  அதற்குப் பிறகு தன் ராஜ்ஜியத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணாக மணம் செய்து கொண்டு மறுநாள் காலை அந்தப் பெண்களை கொலை செய்து விடுகிறான்.  அப்படி ஒரு நாள் அந்நாட்டு மந்திரியின் மகளை மணம் செய்கிறான் அரசன்.  அவள் மன்னனைத் திருத்தும் பொருட்டு ஒவ்வொரு நாள் இரவும் ஒரு கதையைச் சொல்லி அவன் மனதை மாற்ற முயற்சிக்கிறாள்.  இப்படியாக ஆயிரத்தொரு இரவுகள் கதைகள் சொல்வதாக உருவானது அக்கதை.

    இங்கு இந்த ஆயிரத்தொரு இரவுகள் உருவாவதற்கு காரணம் - மன்னனின் மனைவி அவரை ஏமாற்றியதுதான்.

    இவ்வாறு எங்கோ எப்பொழுதோ நடக்கும் ஒன்று வேறொரு இடத்தில் நடக்கும் செயலுக்கு காரணமாக அமைந்தால் அதுவே பட்டர்பிளை எபெக்ட்.

    ஒரு சிறிய நிகழ்வினால் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய நிகழ்வே பட்டாம் பூச்சி நிகழ்வு ஆகும்.