தேவநாகரி எழுத்து ர ( र ) மற்றும் ரோமானிய பெரிய எழுத்து R ஆகியவற்றைப் பயன்படுத்தி வடிவமைக்கப் பட்டுள்ளது. மேலும் இந்தியில் ரூபியா மற்றும் ஆங்கிலத்தில் ரூபாய் என்ற வார்த்தையிலிருந்து பெறப்பட்டுள்ளன. எனவே இந்த சின்னம் இந்தியர்களுக்கும் சர்வதேச பயனர்களுக்கும் அர்த்தமுள்ளதாக இருக்கிறது. மேலும் Shrio Rekha (The horizontal line of Devanagri Script ) வை குறிப்பதாகவும் உள்ளது ( र ). இந்தியாவின் மூவண்ண கொடியைக் ( ₹ ) குறிப்பதாகும். மேலும் Arithmetic sign 'equal to' (சமமான) = வையும் குறிக்கிறது.
2009 ஆம் ஆண்டு இந்திய அரசு இந்திய ரூபாய்க்கு ஒரு குறியீடு உருவாக்கும் போட்டியை அறிவித்தது. 2010 ஆம் ஆண்டு இந்திய வரவு செலவுத் திட்டக் கணக்கின் போது நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இந்திய ரூபாய்க்குக் குறியீடு வேண்டும் என்பதை முன் மொழிந்தார். அக்குறியீடு இந்தியப் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் பறைசாற்றுவதாகவும் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்தப் போட்டியில் மொத்தம் 3331குறியீடுகள் பெறப்பட்டன. இதிலிருந்து ஐந்து பேருடைய குறியீடுகள் மட்டும் இறுதிச் சுற்றுக்கு அனுப்பப்பட்டது.
இறுதியாக ஜுலை 15, 2010 அன்று அமைச்சரவைக் கூட்டத்தில் உதயகுமார் உருவாக்கிய குறியீடு இறுதி செய்யப்பட்டது. இவரது முயற்சிக்காக 2,50,000 பரிசத் தொகையை வழங்கினார்.
உதயகுமார் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர். முன்னாள் திமுக எம்.எல்.ஏ N .தர்மலிங்கத்தின் மகன் ஆவார்.

.jpeg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக