Telephone எனும் வார்த்தை கிரேக்க மொழியில் இருந்து பெறப்பட்டதாகும். Tele என்றால் 'தூரம்'. Phone என்றால் 'சப்தம்', 'குரல்' என்பது பொருள். தொலைபேசி என்பது ஒரு தொலைதொடர்பு சாதனமாகும்.
அமெரிக்க குடியுரிமைப் பெற்ற ஸ்காட்லாந்து நாட்டின் ஒரு காது கேளாதோர் பள்ளி ஆசிரியரின் மகனாகப் பிறந்தவர் அலெக்சாண்டர் கிரகாம்பெல். எடின்பர்க் நகரில் மார்ச் 3, 1847 ஆம் ஆண்டு பிறந்தவர் பெல்.
அவருடைய தந்தை அலெக்சாண்டர் மெல்வில் பெல் ஆவார். இவர் ஒரு ஒலிப்பு நிபுணர் (Phonetician). 'கோட் ' வார்த்தைகளைக் கண்டுபிடித்தவர். பெல்லின் தாய் ஒரு காது கேளாதவர். தாயின் காது கேளா தன்மையே பெல்லை ஒலியியல் படிக்க வழிவகுத்தது எனலாம்.
இலத்தீன், கிரேக்க மொழிகளைப் படிப்பதைவிட பியானோ வாசிப்பதிலும், ஒலி அலைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்வதிலும் தனது நேரத்தைப் போக்கினார் பெல். பேச்சை மின் ஒலியாக மாற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது வந்த காது கேளாத பெண்ணை விரும்பி திருமணம் செய்து கொண்டார்.
பல தந்திகளை அனுப்பும் 'ஹார்மோனிக் டெலிகிராப்' முறையில் சப்தங்கள் எப்படி உருவாகின்றன என்பதைக் கண்டறிந்தார்.
பியானோவில் ஒலி எழுப்பி மின்சாரம் மூலமாக அந்த இசையை ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு அனுப்பினார் பெல். தந்திமுறையில் வெறும் ஒலிகள் மட்டுமே அனுப்பப்பட்டன. பேச்சுகளையும் அந்த முறையில் அனுப்பலாமே என்று 18 வயதிலேயே பெல்லிற்குத் தோன்றியது. அதனால் அந்த முயற்சிகளில் ஈடுபட்டார்.
அக்காலத்தில் மனிதனின் பேச்சொலிகளை ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு தந்திகள் மூலம் அனுப்பப்பட்டு வந்தது . அந்த முறைகள் இவருடைய ஆராய்ச்சிக்கு மிகவும் உதவியாய் இருந்தன. 1875 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மின்சாரம் மூலம் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பேச்சு ஒலியை அனுப்பும் முயற்சியில் வெற்றி பெற்றார். அவ்வாறு அனுப்பிய பேச்சொலி தெளிவில்லாமல் இருந்தது.

![]() |
| பெல்லின் கைகளால் வரைந்த வரைபடம் |
அக்காலத்தில் மனிதனின் பேச்சொலிகளை ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு தந்திகள் மூலம் அனுப்பப்பட்டு வந்தது . அந்த முறைகள் இவருடைய ஆராய்ச்சிக்கு மிகவும் உதவியாய் இருந்தன. 1875 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மின்சாரம் மூலம் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பேச்சு ஒலியை அனுப்பும் முயற்சியில் வெற்றி பெற்றார். அவ்வாறு அனுப்பிய பேச்சொலி தெளிவில்லாமல் இருந்தது.
1876 ஆம் ஆண்டு பெல் தனது உதவியாளர் தாமஸ் வாட்சன் உதவியுடன் தொலைபேசியைக் கண்டுபிடித்தார். 'மிஸ்டர் வாட்சன் இங்கே வாருங்கள். நான் உங்களைக் காண வேண்டும் (Mr. Watson, come here, I want to see you)'. இதுதான் தொலைபேசியில் முதன் முதலாக பேசப்பட்ட வாக்கியம். 1876 ஆம் ஆண்டு பெல் தனது Telephone - னுக்கு காப்புரிமையைப் பெற்ற போது அவருக்கு வயது 29.
இதே காலகட்டத்தில் எலிசாகிரே எனும் அமெரிக்கர் Telephone போன்றே ஒன்றைக் கண்டுபிடித்தார். தாமஸ் ஆல்வா எடிசன் கூட இதேபோல் ஒன்றைக் கண்டுபிடித்தார். ஆனால், Telephone -ஐ முதன் முதலாகக் கண்டுபிடித்தவர் என்று காப்புரிமை பெற்றவர் பெல்தான்.
1877இல் தன் உதவியாளர் வாட்சனுடன் சேர்ந்து "பெல் தொலைபேசி கம்பெனி" என்ற பெயரில் தொலைபேசி நிறுவனம் ஒன்றை நிறுவினார். தொலைபேசியைக் கண்டுபிடித்ததற்காக பிரெஞ்சு அரசு அவருக்கு 50,000 பிராங்க் பரிசுத் தொகையை வழங்கியது. அந்த பரிசுத் தொகையைக் கொண்டு வோல்டா ஆய்வுச் சாலை (Volta Laoratory) என்ற பெயரில் ஓர் அமைப்பை நிறுவினார்.
தனிப்பட்ட முறையிலும் பிற அறிவியல் அறிஞர்களுடன் சேர்ந்தும் 59 கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமையை பெல் பெற்றுள்ளார். 1882 ஆம் ஆண்டு பெல் அமெரிக்கக் குடியுரிமைப் பெற்றார். தன் வாழ்நாளின் பிற்பகுதியை இங்குதான் கழித்தார். ஆகஸ்ட் 2, 1922 ஆம் ஆண்டு கேப் பிரிட்டன் தீவிலுள்ள எஸ்டேட்டில் காலமானார். அன்றைய தினம் அமெரிக்க அரசு, அமெரிக்கா முழுவதும் 5 நிமிடங்கள் டெலிபோன் சேவையை நிறுத்தி, பெல்லிற்கு மரியாதை செலுத்தியது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக